Saturday, December 4, 2010

முதலில் என்அம்மாயியின் வரலாறினை எழுத ஆரம்பிக்கிறேன்.
அறுபது வயது கிழவனுக்கு வாழ்க்கைப் பட்ட பதினெட்டு வயது பெண்ணின் கதை எப்படி இருக்கும்?
மூத்த மனைவிக்கு கொஞ்சம் வயது ஆகி விட்டது என்று, ஒரு வேலைக்காரிக்கு பதிலாக, அந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவள்தான் ஏன் aம்மாயி.
அம்மாயி பிறந்த ஊர்ர்தற்போதைய நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம்- கந்தம் பாளையம் அருகில் உள்ள குழந்தை பாளையம். அங்கே, காளியப்பன் என்ற கவுண்டர் இன விவசாயிக்கும் காளியம்மாள் என்ற அவரது மனைவிக்கும் பிறந்த மூத்த பெண் குழந்தைதான் அம்மாயி. அந்த செக்கச்சிவந்த பேரழகுப்பெட்டகத்துக்கு அந்தப்பெற்றோர்கள் இட்ட பெயர்- கருப்பாயி. நான் சும்மா வார்த்தை அழகுக்காக சொல்ல வில்லை. என் அம்மாயி நிஜமாகவே பேரழகுதான். நல்ல செக்கச்சிவந்த நிறம். அவர்கள் மூக்கு அம்மன் கோவில் சிலையை போல அவ்வ்வளவு கூறாக இருக்கும். எனக்கு மகள் பிறந்த பொது கூட, அந்த மூக்கு என் மகளுக்கு வந்து விடாதா என்று ஏங்கியிருக்கிறேன்.
தும்பை பூ போல கொஞ்சம் கூட வெள்ளை மங்காத சேலை உடுத்தி, நெற்றி நிறைய திருநீறு அணிந்து அவர்கள் வந்தார்கள் ஆனால் அப்படியே, அது ஒரு தெய்வத்தின் சாயலில்தான் தெரியும்.

No comments:

Post a Comment